உயிர் காக்கும் வங்கி
விபத்தாலோ நோயாலோ ரத்தம் இழந்தவருக்கு மாற்று ரத்தம் ஏற்றிக் காப்பாற்றுவது இப்போது சாதாரணச் செயல் ஆகிவிட்டது. இதற்கு உதவுவது ரத்த வங்கி. ரத்தம் ஏற்ற ரத்தத்தைச் சேமிக்க வேண்டும். ரத்தம் உறையும் தன்மை கொண்டது. ஒருவரது உடலில் இருந்து வெளியேறும் ரத்தம் உறைவதைப் பார்த்திருப்போம். இது நொதிவினை (Enzymatic Reaction - என்சைமேடிக் ரியாக் ஷன்) எனப்படும்.ஒருவரிடமிருந்து ரத்தம் தானமாகப் பெறும்போது அது நுண்ணுயிர் நீக்கம் (ஸ்டெரிலைஸ்டு - Sterilized) செய்யப்பட்ட பையில் சேமிக்கப்படுகிறது. இந்தப் பைக்குள் 'சிட்ரேட் உப்புகள்' (Citrate Salt) இருப்பதால் ரத்தம் உறைவது தடுக்கப்படுகிறது.மனித உடலில் உள்ள ரத்த சிகப்பு அணுக்கள் 120 நாட்கள் மட்டுமே வாழக் கூடியது. பின்னர் அவை அழிந்துவிடும். அதே சமயத்தில் எலும்புகளின் உள்ளே இருக்கும் மெல்லிய கொழுப்பிலிருந்து புதிய சிகப்பணுக்கள் உற்பத்தி ஆகி இந்த இழப்பை ஈடு செய்கின்றன. ரத்தத்தில் உள்ள அணுக்கள் அழியாமல் பாதுகாக்க 'அடெனின்' (Adenine), 'டெக்ஸ்ட்ரோஸ்' (Dextrose) ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன. இந்தப் பைகள் 4-6 டிகிரி சென்டிகிரேட் அளவுள்ள குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்படுவதால் உறைவது தவிர்க்கப்படுகிறது. இதனால், ரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகிற ரத்தம் நீண்ட காலத்துக்குப் பயன்படுகிறது.'சோடியம் சிட்ரேட்' (Sodium Citrate) என்ற ரசாயனப் பொருளை ரத்தத்தில் சேர்ப்பதன் மூலம் ரத்தம் உறைவதைத் தடுக்க முடியும்.* ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. ரத்தம் கொடுக்கலாம். அந்த அளவு ரத்தம் 2 வாரங்களில் மீண்டும் உற்பத்தியாகி விடும்.* ரத்த தானம் செய்ய 5 முதல் 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு ரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கிறார்கள். * ரத்த அணு உற்பத்தி உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.ரத்தத்தில் என்னென்ன இருக்கிறது?'எரித்ரோசைட்டுகள்' (Erythrocytes) - சிகப்பு ரத்த அணுக்கள் (Red Blood Cells)'லுயூக்கோசைட்ஸ்' (Leukocytes) - வெள்ளை ரத்த அணுக்கள் (White Blood Cells)'திராம்போசைட்ஸ்' (Thrombocytes) - ரத்தத் தட்டுகள் (Platelets)'பிளாஸ்மா' (Plasma)