மின்னல் பி்ன்னல்
மேக மண்டலத்தில் உருவாகும் மின்சாரம்தான் மின்னல். மேகங்களில் இருக்கும் அணுக்கள் மின்னூட்டம் பெற்று, பூமியின் எதிர் மின்னூட்டத்தின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சாரப் பாய்ச்சலே மின்னல்!ஒவ்வொரு மின்னலிலும் அதிக அளவு மின் சக்தி இருக்கும். என்றாலும், அதில் சிறிது அளவைக் கூட நாம் சேமித்து வைக்க முடியாது.மரங்கள், மாடுகள், மனிதர்கள் என வித்தியாசம் பார்க்காமல் மின்னல் தாக்கும். சில மின்னல்கள் நெருப்பையும் உருவாக்கும். மின்னல் வெட்டும்போது குறுக்கே விமானம் கடந்தால், அதற்கு பாதிப்பு ஏற்படலாம். ஓர் ஆண்டில், சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் (1,60,00,000) மின்னல்கள் ஏற்படுவதாகக் கணித்துள்ளனர். மின்னலின் தாக்கத்தையே 'இடி விழுந்துவிட்டது' என்று குறிப்பிடுகிறோம். மின்னல் வெட்டும்போது மரத்தின் அடியிலோ மின் கம்பத்திற்கு அருகிலோ நிற்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியும். மின்னலை நேரடியாகக் கண்களால் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்போது வீட்டில் இருக்கும் மின்சாதனப் பொருட்களின், மின் இணைப்பை முற்றிலுமாகத் துண்டிப்பது நல்லது. செல்போன்கள் (Cellphones) மின்னலை ஈர்ப்பதில்லை. இருந்தாலும், அதில் பேசும்போது உருவாகும் மின்காந்த அலைகள் மின்சாரத்தை எளிதில் ஈர்க்கின்றன. அந்த நேரத்தில் செல்போன் பேசாமல் இருப்பது நல்லது.மின்னல் வெட்டும்போதும் இடி இடிக்கும்போதும் கூட போன் பேசணுமா, என்ன?* மின்னல் பற்றிய படிப்பு ஃபல்மினாலஜி (Fulminology).* ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம். இதனால்தான் முதலில் மின்னல் ஒளி தெரிந்து, சிறிய இடைவெளிக்குப் பிறகு இடிச் சத்தம் கேட்கிறது.