போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஈஃபல் டவரில் விளக்கு அணைப்பு
சிரியா நாட்டில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் தொடர்ந்து போர் நடக்கிறது. அலெப்போ நகரை மையமாக வைத்து, கடும் தாக்குதல் தொடர்கிறது. இதில் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போர் நிறுத்தப்பட்டு, அமைதி திரும்ப வேண்டும் என, உலக அளவில் கோரிக்கை எழுந்துள்ளது. அதை வலியுறுத்தும் விதமாக, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள, உலக புகழ்பெற்ற ஈஃபல் டவரில், டிசம்பர் 14 அன்று இரவு முழுவதும், விளக்குகள் அணைக்கப்பட்டன.