இறப்பின்றித் துலங்கு வாயே
அவர் நிறைய தமிழ் நூல்களைத் தேடித்தேடிப் பதிப்பித்தவர்.1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம். அந்தத் தமிழறிஞர், சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் இருந்து ஓய்வுபெற்று, திருக்கழுக்குன்றத்திற்குச் சென்று தங்கினார். அந்த ஆண்டே ஏப்ரலில், இயற்கை எய்தினார்.இறந்த அறிஞரைப் பற்றி அவர் இருக்கும்போதே பல ஆண்டுகளுக்கு முன், இன்னொரு மகாகவி ஒரு பாடலை எழுதினார். எழுதியவர் எட்டையபுரத்தில் பிறந்தவர்.'குடந்தை நகர்க் கலைஞர் கோவேபொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்காலமெலாம் புலவோர் வாயில்துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்இறப்பின்றித் துலங்கு வாயே'இருவரையும் கண்டுபிடித்து விட்டீர்களா யார் என்று?குடந்தை நகரில் பிறந்தவர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர்.பாடலை எழுதியவர், மகாகவி பாரதியார்.பாடலின் பொருள்'தமிழுக்கு நீங்கள் செய்த தொண்டின் காரணமாக, காலம் முழுக்கவும் புலவர்கள் உம்மைப் போற்றுவார்கள். வாழ்த்துவார்கள். இறந்தும் இறவாப் புகழுடன் இருப்பீர்கள்'