ஒளிரும் பச்சை
மரகதம் (Emerald - எமரால்ட்)* 'பெரில்' (Beryl) வகையைச் சேர்ந்த, ஒளிரும் தன்மையுடைய ஒரு கனிமம்.* இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம், குரோமியம் போன்ற ரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. * பெரில்லீயம் (Beryllium), அலுமினியம் (Aluminium), சிலிகேட் (Silicate) என்றமூலப் பொருட்களால் ஆனது.* பூமியிலிருந்து வெட்டி எடுக்கும்போது, மங்கலான கல்லாகவே காணப்படும்.* 'வனேடியம்' (Vanadium) என்ற மூலகம் மரகதத்திற்குப் பச்சை நிறம் தருகிறது. * வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை இது கிடைக்கிறது. * மற்ற நவரத்தினங்களுடன் ஒப்பிடும்போது, இதற்கு அடர்த்தித் தன்மை குறைவு. * இந்தக் கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. * பளபளப்பு ஏற்றப்பட்டு அழகுபடுத்தும்போது, தரமானதாக ஆகிறது.* ஆபரணப் பயன்பாட்டில் வைரத்திற்கு அடுத்ததாக அதிக விலையுயர்ந்த ரத்தினமாக மரகதம் உள்ளது. அதிர்ஷ்டக் கல்லாகவும் நம்பப்படுகிறது.* முதல் தரமான மரகதம், கொலம்பியா நாட்டில் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் கல்லில் குரோமியம் அதிகமாக உள்ளதால், தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கிறது.* பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது என்றாலும், இவை தரத்தில் உயர்வானதாக இருப்பதில்லை.- ப.கோபாலகிருஷ்ணன்