ஒலிம்பிக்கில் மனோஜ் குமார்
அஜர்பெய்ஜானில் உள்ள பக்கு நகரில், உலக ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தன. இதன் 'லைட் வெல்டர்வெயிட்' 64 கி.கி. எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மனோஜ் குமார், தஜிகிஸ்தானின் ரகிமோவ் மோதினார்கள். இதில் சிறப்பாகச் செயல்பட்ட மனோஜ் குமார் 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.