உள்ளூர் செய்திகள்

மனம் குவியும் இசை: ஹைட்ரலோபோன் அறிவோம்

1. ஹைட்ரலோபோன் (Hydraulophone) என்றால் என்ன?ஹைட்ரலோபோன் என்பது தண்ணீரைப் பயன்படுத்தி இசைக்கப்படும் ஓர் இசைக்கருவி.2. எந்த ஆண்டு, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?கனடா பொறியாளர் ஸ்டீவ் மான், 2005ஆம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்து 2011இல் காப்புரிமை பெற்றார்.3. யாருக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது?பார்வைக் குறைபாடு உள்ள பியானோ இசைக் கலைஞர்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது.4. ஹைட்ரலோபோன் எவ்வாறு செயல்படுகிறது?தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் அல்லது உலோகக் குழாயில் பியானோ பொத்தான்கள் போலப் பல ஓட்டைகள் வரிசையாக அமைந்திருக்கும். இவை வழியே தண்ணீர் பீச்சியடிக்கும். இந்தத் துளைகளை இசைக்கலைஞர் தனது விரல்கள் மூலம் அடைத்து இசையை வரவழைப்பார். 5. ஹைட்ரலோபோனின் மற்றொரு வகை எது?இசைக்கலைஞர் நீர் நிரம்பிய கண்ணாடித் தொட்டிக்குள் இறங்கி, நீருக்கடியில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ரலோபோனை இசைப்பார். இதற்கு அதீத மூச்சுப் பயிற்சி வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !