உள்ளூர் செய்திகள்

மம்மிக்கு குரல்

எகிப்தில், கி.மு. 1099 முதல் 1069 காலகட்டத்தில் வாழ்ந்த நெஸ்யமன் என்ற மதகுருவின் மம்மியை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த மதகுருவின் குரல் எப்படி இருந்திருக்கும் என்ற யோசனை தோன்றியது. உடனே, மம்மியின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டு, 3டி அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு, மருத்துவர்கள் அந்த மம்மியின் குரலை செயற்கையாக உருவாக்கி சோதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !