பிரதமர்களின் அருங்காட்சியகம்
நம் நாட்டை இதுவரை 16 பிரதமர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூவருக்கு மட்டுமே நினைவிடங்கள் உள்ளன. எனவே, அனைத்துப் பிரதமர்களின் வாழ்க்கை விவரங்கள், ஆட்சிக்கால சாதனைகள் ஆகியவற்றை விளக்கும் வண்ணம் ஓர் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, டில்லியில் ரூ.271 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக, 10,975 ச.மீ., பரப்பில் இரு மாடிகள் கொண்ட கட்டடத்துக்கு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். இன்னும் ஓராண்டில் இப்பணிகள் முடிவடைந்து, பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.