உள்ளூர் செய்திகள்

என் செல்லப் புத்தகங்கள்!

புதிய வகுப்பு, புதிய பாடப் புத்தகங்கள் என உற்சாகமாகப் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியிருப்பீர்கள். பாடப் புத்தகங்களின் முதல் வாசனை உங்களைக் குதூகலப்படுத்தி இருக்கும். பிறந்த குழந்தையைத் தூக்குவது மாதிரி பாடப் புத்தகங்களை தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்திருப்பீர்கள். பாடப் புத்தகங்களை எப்படி அணுகுகிறீர்கள் என்று சென்னை, கொளத்தூர், கேபிஜே குருகுலம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம். இதோ அவர்களுடைய கருத்துகள்:ரா.ம.லெக் ஷ்மணன், 8ஆம் வகுப்புபுதுப் புத்தகங்கள் எல்லாம் என்னோட செல்லக் குட்டிகள். ஒவ்வொரு புத்தகத்திலேயும், சின்னச் சின்னத் தலைப்புகளா பிரிச்சு ஒவ்வொரு பத்தியா விளக்குறப்ப, படிக்க எளிதா இருக்கு. கூடவே, பக்கத்துல படங்கள் நிறைய இருக்கறதால, படத்தைப் பார்த்து புரிஞ்சுக்க முடியுது. குறிப்பா, படங்களோட பாடங்களைப் படிக்கறப்ப கற்பனைத் திறன் அதிகமாகுது. அறிவியல் பாடங்களில் இன்னும் நிறைய படங்களோட விளக்கியிருக்கலாம்.பா.பிரியாதர்ஷினி, 8ஆம் வகுப்புபுது புக்ஸோட புது பையும் வாங்கியிருக்கேன். அவ்வளவு அழகா இருக்கு. பாடப்புத்தகத்துல எனக்குப் பிடிச்ச விஷயம், ஒரு பாடத்தை படிச்சிட்டே வரும்போது, பக்கத்துல சின்னச்சின்ன கட்டத்துல அது தொடர்பான விஷயங்களைக் கொடுக்கறாங்க. உதாரணத்துக்கு, தாவரங்களைப் பத்திப் படிக்கும்போது, அறிவியல் வார்த்தைக்கு, அது எந்த மொழியில இருந்து உருவாச்சு, அறிவியல் கண்டுபிடிப்பாளர் பற்றிய குறிப்பு இருக்கறது.கு.பிரகதீஷ்வரி, 8ஆம் வகுப்புஎனக்கு சமூக அறிவியல் பாடம் ரொம்பப் பிடிக்கும். அதுல இருக்கற மேலும் அறிந்து கொள்வோம் பகுதி எனக்கு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கச் செய்யுது. அதேபோல, செய்முறைப் பயிற்சி பகுதி, படிக்கறதை மேலும் உற்சாகமாக்குது. புதுசா வந்திருக்கற 9ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களையும் வாங்கிப் பார்த்தேன். கலர்ஃபுல்லா, நிறைய மாற்றங்களோட வந்திருக்கு.ரா.விக்னேஷ், 8ஆம் வகுப்புலீவிலேயே எல்லா பாடப் புத்தகங்களுக்கும் அட்டைபோட்டு, அழகுபடுத்திட்டேன். அதுல இருக்கிற படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நாமே செஞ்சு பார்க்கற மாதிரியான எளிய பரிசோதனைகளும் பிடிக்கும். பரிசோதனைகளை செஞ்சு பார்க்கறப்ப, ஈசியா மனசுல பதியும். படிக்கறதுக்கு ஆர்வமா இருக்கு. படிக்கறதை நினைவுல வெச்சிக்க 'ரீ கால்' பகுதி உதவுது.க.நிஷா, 8ஆம் வகுப்புஇந்த ஆண்டாவது மூலைகள் மடியாமல், அழகா வெச்சுக்கணும்னு மனசுல திட்டம் வெச்சிருக்கேன். அதுவும் அறிவியல், கணக்குப் புத்தகங்களைப் பத்திரமா பாத்துக்கணும். கணக்குப் புத்தகத்துல நிறைய பயிற்சிகள் இருக்கறதால, தொடர்ந்து கணக்குகளைப் போட்டுப்பார்த்து நல்லா மனசுல பதிய வெச்சுக்க முடியுது. புத்தகத்தோட கடைசியில விடைகள் கொடுத்திருக்கறதால, நாம சரியா செஞ்சிருக்கோமான்னு தெரிஞ்சுக்க முடியுது. அதுபோலவே கேள்விகளுக்கான விடைகளையும் எல்லாப் புத்தகங்களின் கடைசியில கொடுத்திருந்தா நல்லாயிருக்கும். மு.லூபிகா, 8ஆம் வகுப்புபுத்தகங்கள் வண்ணமயமா இருக்கறது பிடிக்கும். ஒவ்வொரு தலைப்போட கடைசியில பொருத்துக, நிரப்புக பகுதி இருக்கறதால, நாம என்ன படிச்சோம், எதெல்லாம் நினைவுல வெச்சிருக்கோம்னு மறுபடி செக் செஞ்சு பார்த்துக்கலாம். சமூக அறிவியல் பாடத்துல வரைபடத்தோட கொடுத்திருக்கிறதால, எந்தெந்தப் பகுதியில் எந்தத் தொழிற்சாலை இருக்குன்ற தகவலை எளிமையாத் தெரிஞ்சுக்க முடியுது.சு.அ.சுபாஷ்னி, 9ஆம் வகுப்புஎங்களுக்கு இந்த ஆண்டு புத்தகங்கள் புதுசா மாறியிருக்கு. எல்லாப் பாடப்புத்தகத்தையும் ஒருமுறை புரட்டிப்பார்த்தேன். தமிழ்ப் புத்தகம் ரொம்பப் பிடிச்சிருந்தது. தெரிந்து தெளிவோம், க்யூஆர் கோட் கொடுத்து கற்பவை கற்றபின் அப்படிங்கற தலைப்புல பாடம் சம்பந்தமான கூடுதல் தகவல்களைக் கொடுத்திருக்கிறதுன்னு பல பகுதிகள் ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லாப் புத்தகங்களும் நிறையப் படங்களோட இருக்கறது நல்லாயிருக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !