இயற்கை இன்பம்: ரீலா, ரியலா?
மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) சொலானேசி (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. தவறு. இது யுஃபோர்பியேசி (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்டது. இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மரவள்ளிக் கிழங்கின் ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 6 சதவீதம். மரவள்ளியிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பல்வேறு துறைகளில் பயன்படுகிறது. குறிப்பாகப் பருத்தி, சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம், கெட்டி அட்டைகள் தயாரிப்பில் உபயோகமாகிறது. உணவு, மருந்து தயாரிக்கும் பல தொழிற்சாலைகளில் மரவள்ளிக் கிழங்கு மாவு திரவ குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.