நேபாளப் பெண்ணின் எவரெஸ்ட் சாதனை
நேபாளத்தைச் சேர்ந்த மலையேறும் வீராங்கனை, லஹாக்பா ஷேர்பா (வயது 42). இப்போது, அமெரிக்காவில் வசித்துவருகிறார். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டுக்குள் ஆறு முறை ஏறி சாதனை படைத்தார். எவரெஸ்ட் சிகரத்தில், ஆறு முறை ஏறிய ஒரே பெண் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. இந்நிலையில், ஏழாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார்.