நியூஜெர்ஸி மேயரான சீக்கியர்
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தின் ஹோபோக்கன் நகரின் புதிய மேயராக சீக்கிய மதத்தைச் சேர்ந்த ரவீந்தர் பல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் தான். பொருளாதாரமும், சட்டமும் படித்தவர். 2009ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக, ரவீந்தர் அமெரிக்க நகர கவுன்சில் உறுப்பினர் பதவியிலும் சிறப்பாகச் செயலாற்றி வந்துள்ளார். ஹோபோக்கனின் முன்னாள் மேயரின் ஆதரவும் இவருக்கு இருந்துள்ளது. இதனால் இத்தேர்தலில் இவருக்கான வெற்றி வாய்ப்பு எளிதாகியது. இவரின் வெற்றி, நியூஜெர்ஸியில் உள்ள இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.