உள்ளூர் செய்திகள்

செய்தி அறிவோம்: ஆக்ஸ்போர்டு அகராதியில், ஐயோ

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில், தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் சொற்களில் ஒன்றான 'ஐயோ' புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.முன்னணி ஆங்கில அகராதியாக, 150 ஆண்டுகால ஆக்ஸ்போர்டு அகராதி (OxfordEnglish Dictionary) திகழ்கிறது. 6 லட்சத்துக்கும் அதிகமான சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அதிர்ச்சியையோ, துக்கத்தையோ வெளிப்படுத்த, தமிழர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சொல்லான, 'ஐயோ' என்ற வார்த்தை ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவரை மரியாதையாக அழைக்கப் பயன்படும், 'ஐயா' என்ற வார்த்தையும், கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 'In southern India and Sri Lanka, expressing distress, regret, or grief; 'Oh no!', 'Oh dear!'என்று 'ஐயோ' சொல் குறித்து ஆக்ஸ்போர்டு அகராதியில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், 'ஐயோ' என்ற சொல் புழக்கத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.indiatoday.intoday.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !