இனிது இங்கிலீஷ்
1. SWIMS என்ற வார்த்தையை, புத்தகத்தைத் தலைகீழாகத் திருப்பிப் படித்தாலும் சரியாகத்தான் இருக்கும். இதுபோன்ற சொற்கள் ambigram எனப்படும்.2. ஈ என்ற ஒலியை உச்சரிக்க ஆங்கிலத்தில் ஏழு வழிகள் உள்ளன. இந்த வாக்கியத்தில் அவை அனைத்தும் உள்ளன: 'He believed Caesar could see people seizing the seas'.3. Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis என்பது தான் ஆங்கிலத்தின் நீளமான வார்த்தை. இதைப் படிக்க முடிகிறதா?என்ன தலை சுற்றுகிறதா? உங்களுக்காக இதைத் தமிழில், எளிமையாக பிரித்துக் கொடுத்துள்ளோம், இதைப்படித்து அசத்துங்கள்!நிமோனோ அல்ட்ரா மைக்ரோஸ்கோபிக் சிலிக்கோ வல்கனோ கோனியோசிஸ்.இது மனிதனின் நுரையீரலைத் தாக்கும் ஒருவித நோயின் பெயர்.