விசா தேவையில்லை
இந்திய சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், மலேசியாவிற்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அந்நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுலா வர விரும்புபவர்கள் இந்தியாவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் தங்களது பெயர்களைப் பதிவுசெய்து, 3 மாதங்களுக்குள் சுற்றுலா வர வேண்டும் என்றும், திரும்பிச் செல்வதற்கான டிக்கெட்டுடன் வந்தால் போதுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 டிச.31ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.