இயல்பான இயற்பியல்: நிறையா? எடையா?
கோடிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில் வர வேண்டிய சொல் 'நிறையா' அல்லது 'எடையா' என கண்டறிக.1. ---இன் அலகு 'நியூட்டன்'.2. இயற்பியல் தராசு மூலம் ---- அளவிடப் படுகிறது.3. --- என்பது ஓர் அடிப்படை அளவாகும்.4. ---இன் அலகு 'கிலோகிராம்'. 5. --- இடத்திற்கு இடம் மாறும் திறன் பெற்றது. விடைகள் 1) எடை, 2) நிறை, 3) நிறை, 4) நிறை, 5) எடை.