எண்ணும் எழுத்தும்: விலை என்ன?
ரகு என்பவர் பர்னிச்சர் கடைக்குச் சென்று மெத்தை, மேஜை, நாற்காலி ஆகியவற்றை வாங்கினார். மூன்றும் சேர்த்து ரூ.2800 ஆனது.இதில், * மேஜை விலையை விட மெத்தை விலை ரூ.1800 அதிகம்.* அதேநேரத்தில், நாற்காலி விலையுடன் ரூ.2600 இருந்தால், அவரால் மெத்தையையும் மேஜையையும் வாங்கிட முடியும்.எனில், மெத்தை, மேஜை, நாற்காலி ஆகியவற்றின் தனித் தனி விலை என்ன?கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!விடைகள்: மெத்தை, மேஜை, நாற்காலி ஆகியவற்றின் விலை = ரூ.2800மேஜை விலையை x என்க.மெத்தை விலை = x+1800நாற்காலி விலை + 2600= x + (x + 1800)நாற்காலி விலை= 2x + 1800 - 2600ஆக, மூன்று பொருள்களின் மொத்த விலை = x + x + 1800 + 2x+ 1800 - 2600 = 2800=> 4x + 1000 = 2800=> 4x = 2800 - 1000=> x = 1800/4=> x = 450எனவே, மேஜை விலை = ரூ.450.மெத்தை விலை = 450 + 1800 = ரூ.2250நாற்காலி விலை = 2(450) + 1800 - 2600 = 900 - 800 = ரூ.100.