உள்ளூர் செய்திகள்

எண்ணும் எழுத்தும்: இன்று என்ன சிறப்பு நாள்?

இன்று உலகம் முழுவதும் ஒரு குறியீடு கொண்டாடப்படுகிறது. அது என்ன குறியீடு?அந்தக் குறியீட்டின் விகித மதிப்பு ஒரு சிறப்புத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.அந்தக் குறியீடு 1706இல் அறிமுகம் ஆனாலும், அதன் மதிப்பு கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளாக அறியப்படுகிறது.பாபிலோனியர், எகிப்தியர்கள், இந்தியர்கள், சீனர்கள் ஆகிய பல்வேறு சமூகத்தினரும் அதன் தசம மதிப்புகளை அதிகமாகக் கண்டறியப் போராடியுள்ளார்கள்.அது ஒரு விகிதமுறா எண் என்பதால், இன்னும் அதற்கான விடை கிடைக்கவில்லை. அதன் தசம மதிப்பு, கடந்த மார்ச் 14 வரை 105 லட்சம் கோடியாக (105,000,000,000,000) இருந்தது. தற்போது 202 லட்சம் கோடியை (202,112,290,000,000) எட்டியுள்ளது. ஒரு வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பு அது.என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா, அது என்ன குறியீடு என்று?ஒவ்வோர் ஆண்டு மார்ச் 14 அன்றும் அந்தக் குறியீடு கொண்டாடப்படும்.விடைகள்: குறியீடு: π (பை)சிறப்பு நாள்: 'தோராய நாள்' (22.07)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !