கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்ட ஒபாமா
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, அமெரிக்காவின் தேசிய குழந்தைகள் மருத்துவக் காப்பகத்திற்குச் சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.கடந்த புதன்கிழமை தேசிய குழந்தைகள் மருத்துவக் காப்பகத்திற்குச் சென்ற ஒபாமா, சாண்டா கிளாஸ் போன்று தொப்பி அணிந்து இருந்தார். பை நிறைய பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்ற அவர், ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார். அங்கிருந்த குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். பராக் ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தாவாக வலம் வரும் வீடியோவை தேசிய குழந்தைகள் மருத்துவமனை, தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.