இருநாட்டு எல்லையில், ஒற்றுமை கச்சேரி
அமெரிக்க எல்லையில், ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடத்தப்பட்ட 'ஒற்றுமை கச்சேரி'யில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமெரிக்காவில், வரும் நவம்பர் 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் முன்னணியில் உள்ளனர். இவர்கள், பொதுமக்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிரம்ப் தாம் அதிபரானால், அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில், தடுப்பு சுவர் கட்டப்போவதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில், பிரபல லத்தீன் அமெரிக்க இசைக் கலைஞர்கள் ஒற்றுமை கச்சேரியை நடத்தினர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு, சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, பாடல்கள் பாடி இசைத்தனர். sandiegouniontribune.com/