உள்ளூர் செய்திகள்

ஒரு நாட்டுக்காக இன்னொரு நாடு!

“நான் சாப்பிட்டு ரெண்டு நாட்கள் ஆகுது. இப்ப நான் ஏதாவது சாப்பிட்டே ஆகணும். அதோ அங்க ஒரு மிருகம் செத்துக் கிடக்குது. துர்நாற்றம் வீசுது. வேற வழியே இல்லை. நெருப்பு மூட்டி, இதைச் சமைச்சுச் சாப்பிடப் போறேன்” இதைப் படித்ததும் டிஸ்கவரி சேனலில் வரும் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சி நினைவில் வரும்! ஒரு காட்டில் தனித்து விடப்பட்ட மனிதன் இயற்கையுடன் இயற்கையாக வாழ்ந்து தன் உயிரை எப்படிக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே அந்த நிகழ்ச்சி.அது மாதிரி நம்மால் தனித்து வாழ முடியாது. சமூகத்தில் நாம் வாழ பிறரின் உதவிகள் அவசியம் தேவை. இது நமக்கு மட்டுமல்ல நாம் வாழும் நாட்டுக்கும்தான்! ஒருநாடு உலக அரங்கில் சிறப்பாகச் செயல்பட இன்னொரு நாட்டின் உதவி தேவை. இவ்வாறு, பல நாட்டு உறுப்பினர்களுடன் உலக மக்களுக்காகச் செயல்படும் ஓர் அமைப்பு ஐ.நா. அல்லது ஐக்கிய நாடுகள் சபை.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக அமைதி, பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு இது. அக்டோபர் 24, 1945ல் சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் ஐ.நா. நிறுவப்பட்டு, தனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அமைக்கப்பட்ட சபைகள், அதன் செயல்கள் ஆகியன பற்றித் தெளிவாகக் கூறப்பட்டன. இதன் முதல் கூட்டம் லண்டனில் 1946ஆம் ஆண்டில் கூடியது.நோக்கங்கள்:* ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்.* நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்துதல்.* மக்களின் சம உரிமைகளை மதித்தல்.* உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் பிரச்னைகளைச் சமாதான முறையில் தீர்த்துக்கொள்ளல்.இதன், பொதுச் செயலாளர், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன் தேர்வு செய்யப்படுகிறார். ஏழாவது பொதுச் செயலாளராக இருந்த கோபி அன்னான் ஓய்வு பெற்றவுடன், எட்டாவது பொதுச் செயலாளராக ஜனவரி 1, 2007ல் பான் கி மூன் (பிறப்பு: ஜூன்13, 1944) பொறுப்பை ஏற்றார். இந்த ஆண்டின் (2016) இறுதிவரை பொறுப்பில் இருப்பார்.ஐ.நா. சபை என்று பெயர் வைத்தவர்: பிராங்ளின் ரூஸ்வெல்ட்பொதுச்சபை (General Assembly) இருக்கும் இடம்: நியூயார்க் அலுவலக மொழிகள்: ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம், ரஷ்யா, ஸ்பானிஷ், அரபி.சின்னம்: இளம் நீலத்தின் நடுவே அமைந்த வெள்ளை வட்டம்.முதன்முதலில் இந்தியில் உரையாற்றியவர்: ஏ.பி.வாஜ்பாய் (முன்னாள் இந்தியப் பிரதமர்)ஐ.நா. சபையில், அனுமதியின் பேரில் பாடல் பாடிய முதல் கலைஞர்: எம்.எஸ்.சுப்புலட்சுமி (1966)ஐ.நா பொதுச்சபை வருடத்திற்கு 2 முறை கூடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !