உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அதிகபட்சமாக எந்தத் துறைக்கு, ரூ.55,261 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது?அ. சுகாதாரம்ஆ. கல்வி இ. காவல்ஈ. பொதுப்பணி2. நிலவை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்படும், 'சந்திரயான் 5' திட்டத்தில், எத்தனை கிலோ எடையுள்ள, 'ரோவர்' வாகனம் அனுப்பப்பட உள்ளதாக, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்?அ. 300 கிலோஆ. 600 கிலோஇ. 250 கிலோ ஈ. 450 கிலோ3. ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான, சென்னை ஐ.சி.எப்.பில், எந்த ரயில்களில், இருக்கை வசதியுள்ள தயாரிப்பைக் குறைத்து, படுக்கை வசதியுள்ள தயாரிப்பை அதிகரிக்க, ஐ.சி.எப். நிர்வாகம் முடிவு செய்துள்ளது?அ. வந்தே பாரத்ஆ. எக்ஸ்பிரஸ்இ. மெட்ரோஈ. புல்லட்4. இந்திய இசை, கலாசாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், சிம்பொனி இசையை இயற்றியது அவரது இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிப்பதாக, எந்த இசையமைப்பாளர் குறித்து, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்?அ. அமித் திரிவேதிஆ. அனில் பிஸ்வாஸ்இ. ஏ.ஆர்.ரஹ்மான்ஈ. இளையராஜா 5. இந்தியாவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் மிகப்பெரிய பணக்காரராக, ரூ. 3,400 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிர எம்.எல்.ஏ.வான பராக் ஷா, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்?அ. நவநிர்மான் சேனாஆ. காங்கிரஸ்இ. பாரதிய ஜனதாஈ. சுவராஜ்6. தமிழ்ப் புத்தாண்டு முதல், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீடுதோறும் இலவசமாக வழங்கப்படும் என, எந்த யூனியன் பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணன் தெரிவித்துள்ளார்?அ. லடாக்ஆ. புதுச்சேரிஇ. சண்டிகர்ஈ. டில்லி7. தடகள போட்டியில், ஒரு மைல் தூர (1.6 கி.மீ.) ஓட்டப்பந்தயத்தில், இலக்கை 3 நிமிடம், 58.35 வினாடியில் கடந்து, 4 நிமிடங்களுக்குக் குறைவாகக் கடந்த இளம் வீரர் (15 வயது) என்ற சாதனையைப் படைத்துள்ள சாம் ரூத், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?அ. சுவிட்சர்லாந்துஆ. இந்தியாஇ. ஆப்பிரிக்காஈ. நியூசிலாந்து8. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், ஒன்பது மாதங்களாகத் தங்கியிருந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுடன் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர் யார்?அ. ஆனி மெக்லின்ஆ. புட்ச் வில்மோர்இ. நிகோல் ஏயர்ஸ்ஈ. தகுயா ஒனிஷிவிடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4. ஈ, 5. இ, 6. ஆ, 7. ஈ. 8. ஆ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !