நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. தமிழகத்தில், விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்த, தலா எவ்வளவு ரூபாய் வரை நிதியுதவி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது?அ. ரூ.25 லட்சம்ஆ. ரூ.50 லட்சம் இ. ரூ.40 லட்சம்ஈ. ரூ.10 லட்சம்2. ரிசர்வ் வங்கி, அரசுக்கு வழங்கவுள்ள ரூ.2.69 லட்சம் கோடி ஈவுத்தொகையால், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை எவ்வளவு சதவீதமாகக் குறைய வாய்ப்பு உள்ளதாக, எஸ்.பி.ஐ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது?அ. 3.35 ஆ. 2.20 இ. 4.20 ஈ. 6.50 3. அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு விதிக்கப்பட இருந்த 5 சதவீத வரி, எவ்வளவு சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது?அ. 3.50ஆ. 4.25 இ. 4.00ஈ. 3.254. சமீபத்தில், 'இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி சர்வதேச செஸ் ஆர்பிட்டர்' (அம்பயர்) எனும் சாதனையைப் படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்?அ. அறிவழகன்ஆ. செல்வகுமார்இ. சேகரன்ஈ. அங்கப்பன்5. சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய புள்ளி விவரப்படி, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ள இந்தியா, அந்த இடத்தில் இருந்த எந்த நாட்டைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது?அ. சீனாஆ. ஜப்பான் இ. அமெரிக்காஈ. ரஷ்யா6. தமிழகத்தில் வாழிடங்கள் குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால், எந்த வகை மான்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு உள்ளதாக, வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்?அ. சருகு மான் ஆ. புள்ளி மான்இ. நாற்கொம்பு ஈ. எலிமான்7. ஜெர்மனியில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில், தங்கம் வென்ற இந்திய வீராங்கனை?அ. அஸ்வினிஆ. தேஜஸ்வினி இ. பிரியதர்ஷினிஈ. லட்சுமிபிரியாவிடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4. ஈ, 5. ஆ, 6. இ, 7. ஆ.