உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்!

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. தமிழகம், கேரளம் உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில், எத்தகைய அரிய வகை கனிமம், 1,315 கோடி கிலோ அளவு கண்டறியப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது?அ. காலியம்ஆ. மோனசைட் இ. லித்தியம்ஈ. அடிலைட்2. ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த மணிப்பூர் மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவராகத் தேர்வாகி, மாநில முதல்வராகப் பதவியேற்றது யார்?அ. ஓக்ரம் இபோபி சிங்ஆ. யும்னம் கெம்சந்த்சிங் இ. நாங்தோம்பம் பீரேன் சிங்ஈ. ரிசாங் கேசிங்3. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், 24 மணி நேரத்தில் எத்தனைப் பெண்களுக்கு, இலவச இ - சைக்கிள் வழங்கி, அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்?அ. 3,742 ஆ. 4,742இ. 2,742ஈ. 5,7424. மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில், வரும் கல்வியாண்டு முதல், 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில், 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என, இந்தியாவின் எந்த மாநில கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது?அ. தமிழ்நாடுஆ. கேரளம் இ. அசாம்ஈ. மேற்குவங்கம்5. சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்காத, 68,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து, எந்த மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது?அ. உத்தரப்பிரதேசம் ஆ. பீகார் இ. தெலங்கானாஈ. சிக்கிம்6. மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை?அ. இகா ஸ்வயாடெக், போலந்து ஆ. சபலென்கா, பெலாரஸ்இ. எலினா ரிபாகினா, கஜகஸ்தான் ஈ. கோகோ கவுஃப், அமெரிக்காவிடைகள்: 1. ஆ, 2. ஆ, 3. அ, 4. ஆ, 5. அ, 6. இ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !