உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. பெட்ரோல் பங்க்குகளில், ஒரு வாடிக்கையாளர் அல்லது வாகனத்திற்கு, ஒரு நாளில் எத்தனை லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக்கூடாது என, எண்ணெய் நிறுவனங்களுக்கு, பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது?அ. 100ஆ. 300இ. 200ஈ. 4002. உலகின் மிகச் சிறந்த இசைக் குழுவான, லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழுவின் இசைக் கலைஞர்களை வைத்து, இளம் வயதில் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவை உருவாக்கி உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்?அ. இசைவாணன்ஆ. லிடியன் நாதஸ்வரம்இ. யாழ்வேந்தன்ஈ. கானவண்ணன்3. அனைத்து அரசுப் பள்ளி, கல்லூரிகளில் எல்.கே.ஜி. முதல், முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என அறிவித்து, கல்வியை முற்றிலுமாக இலவசமாக்கிய முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்ற மாநிலம் எது?அ. தமிழ்நாடுஆ. ஒடிசாஇ. கேரளம்ஈ. மஹாராஷ்டிரம்4. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய, தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தின் பெயர் என்ன?அ. தமிழ் லீடர்ஆ. பீப்பிள் லீடர்இ. ஐ எம் லீடர்ஈ. வீ தி லீடர்5. அமெரிக்காவில் நடந்த, தேசியக் கல்லூரி தடகள கூட்டமைப்பு சார்பிலான பல்கலை அளவிலான தடகளப் போட்டியில், 'டிரிபிள் ஜம்ப்' பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர்?அ. செல்வ பிரபுஆ. திவாகரன்இ. கணேஷ்குமார்ஈ. செந்தில்வேல்விடைகள்: 01. இ02. ஆ03. ஆ04. ஈ05. அ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !