நூற்றுக்கு நூறு: சராசரி கணக்கு!
அன்பு தனது காரில் சென்னை டூ புதுச்சேரி பயணம் செய்தார்.நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ. தூரத்தை, மணிக்கு 100 கி.மீ. என்ற சீரான வேகத்திலும்;கிராம சாலைகள் வழியாக 100 கி.மீ. தூரத்தை, மணிக்கு 50 கி.மீ. என்ற வேகத்திலும் பயணம் மேற்கொண்டார்.எனில், அவரது பயணத்தின் சராசரி வேகம் என்ன?அ) 60 கி.மீ./மணி ஆ) 67 கி.மீ./மணிஇ) 70 கி.மீ./மணிஈ) 75 கி.மீ./மணிவிடைகள்:அ) 60 கி.மீ./மணிவிளக்கம்:நமக்கு வேகத்தின் சூத்திரம் தெரியும். அதாவது,வேகம்(S) = தூரம்(D) / நேரம்(T)இதனை, நேரம் = தூரம்/வேகம் என்றும் எழுதலாம்.நெடுஞ்சாலை வழியாக:T1 = 50/100 = 1/2 மணி நேரம்கிராம சாலை வழியாக:T2 = 100/50 = 2 மணி நேரம்பயணத்தின் சராசரி வேகம்= (D1+D2)/(T1+T2) = (50+100)/(1/2+2) = 150/2.5 = 60 கி.மீ./மணி.