நூற்றுக்கு நூறு: எவ்வளவு நேரம் ஆகும்?
ஒரு தண்ணீர் தொட்டியை A குழாயால் 15 மணி நேரத்தில் நிரப்ப முடியும்.ஆனால், அது முதல் பாதியை நிரப்பியதும்; தொட்டியை வேகமாக நிரப்ப, B குழாயும் திறக்கப்படுகிறது.தனியாக, B குழாய் மட்டும் அந்தப் பாதியை நிரப்பினால், அது 10 மணி நேரம் எடுத்துகொள்ளும்.எனில், தொட்டி முழுவதும் நிரம்ப எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?விடைகள்: விடை: 10.5 மணி நேரம்விளக்கம்:தொட்டியை A குழாயால் 15 மணி நேரத்தில் நிரப்ப முடியும். அப்படியானால், முதல் அரை தொட்டியை நிரப்ப அது, 1/2 ÷ 1/15 = 15/2 = 7.5 மணி நேரம் எடுத்துக்கொண்டிருக்கும்.மீதி பாதி தொட்டியை இரண்டு குழாய்களும் சேர்ந்து நிரப்புகின்றன.அப்படியானால், 1/15 + 1/10 = 1/6இவை எடுத்துக்கொள்ளும் நேரம் = 1/2 ÷ 1/6 = 6/2 = 3ஆக, மொத்த நேரம் = 7.5 + 3 = 10.5 மணி நேரம்.