உள்ளூர் செய்திகள்

நூற்றுக்கு நூறு: தேர்வில் எத்தனை கேள்விகள்?

ஒரு மாணவி போட்டித் தேர்வு ஒன்றை எழுதினார். தேர்வில், x கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டது.முதல் 20 கேள்விகளில், அந்த மாணவி 15 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தார்.மீதமிருந்த கேள்விகளில், 3இல் 1 பங்கு, அதாவது, 1/3 கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதினார்.மாணவி 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால், தேர்வில் கேட்கப்பட்ட மொத்த கேள்விகள் (x) எத்தனை?அ) 100, ஆ) 20, இ) 50, ஈ) 40.விடை: இ) 50.தீர்வு: கேள்வியில் உள்ள தகவல்களை வைத்து, இந்தச் சமன்பாட்டை அமைக்கலாம்:15 + 1/3 × (x-20)= 50% × x(இதில், (x-20) என்பது முதல் 20 கேள்விகள் போக மீதமுள்ளவை.)15 + x/3 - 20/3= 50x/10015 + x/3 - 20/3 = x/2x/3 - x/2 = 20/3 - 15(2x-3x)/6 = (20-45)/3-x/6 = - 25/3x/6 = 25/3x = 25/3 × 6x = 25 × 2x = 50.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !