நூற்றுக்கு நூறு: எப்போது சந்திப்பார்கள்?
ஒரு வட்டப்பாதையில், மூன்று பேர் ஒரு புள்ளியிலிருந்து ஓடத் (jogging) தொடங்குகிறார்கள். ஒவ்வொருவரும் வட்டப்பாதையின் ஒரு சுற்றை முடிக்க, 24 வினாடிகள், 36 வினாடிகள், 48 வினாடிகள் முறையே ஆகிறது. எனில், எவ்வளவு நேரத்தில் மூவரும் அதே புள்ளியில் மீண்டும் சந்திப்பார்கள்?அ) 140 வினாடிகள்ஆ) 144 வினாடிகள்இ) 252 வினாடிகள்ஈ) 216 வினாடிகள்விடை: ஆ) 144 வினாடிகள்தீர்வு: இந்தக் கேள்விக்கான விடையை எளிதாகக் கண்டறிய, மீச்சிறு பொது மடங்கு (மீ.சி.ம. - LCM) என்ற கணித முறையைப் பயன்படுத்தலாம்.24இன் மடங்குகள்: 24, 48, 72, 96, 120, 144, 168,...36இன் மடங்குகள்: 36, 72, 108, 144, 180,...48இன் மடங்குகள்: 48, 96, 144, 192,...இந்த 24, 36, 48 ஆகிய எண்களின் மடங்குகளில் உள்ள பொதுவான எண் 144 ஆகும்.எனவே, வட்டப்பாதையில், 144வது வினாடியில் மூவரும் தொடக்கப் புள்ளியில் சந்திப்பார்கள்.