உள்ளூர் செய்திகள்

ஒலி ஆபத்தில் அவதிப்படும் ஓங்கில்!

கங்கை நதியில் வாழும், அருகிவரும் உயிரினங்களில் மிக முக்கியமான ஒன்று, ஆற்று ஓங்கில். ஆற்றில், ஓங்கில் உயிரினம் வசிக்குமா என்கிற சந்தேகம் பலருக்கு உண்டு. கடலில் இருப்பதைப் போலவே கங்கை நதியிலும் 'ஆற்று ஓங்கில்' என்று சொல்லப்படும் இந்த வகை ஓங்கில் வசிக்கிறது. இந்தியாவில், பீகார் மாநிலத்தில் உள்ள கஹல்கான் என்கிற ஊரின் வழியாக ஓடும் கங்கை நதியில் ஓங்கில்கள் அதிகம் காணப்படுகின்றன. இதற்குக் கண் பார்வை கிடையாது. காதுகளில் விழும் மற்ற உயிரினங்களின் ஒலி மற்றும் ஒலிக் குறிப்புகளைக் கொண்டே இவை இரை தேடும். இந்த ஒலிக் குறிப்புகளின் அடிப்படையிலேயே, இவை மற்ற உயிரினங்களுடன் தொடர்பிலும் இருக்கும்.ஒலிக் குறிப்புகள்!ஈசல் போன்று இருக்கும் குட்டிக் குட்டி பூச்சிகளின் ரீங்கார ஒலியும், 'பூனை மீன்' எனப்படும் ஒருவகை மீனின் சீரான உறுமல் சத்தமும் தொடர்ந்து கேட்கும். ஒரு மின்விளக்கை அணைத்து அணைத்துப் போட்டால் எப்படி இருக்குமோ, அதுபோன்ற சீரான தாளக்கட்டுடன் இந்த ஒலி கங்கை நதியில் கேட்கும். இத்தகைய சத்தங்கள் இருந்தால், நிச்சயம் அந்தப் பகுதியில் ஓங்கில்கள் வாழ்கின்றன என அர்த்தம். அவை, இந்தச் சத்தத்தைப் புரிந்துகொண்டு, அல்ட்ராசோனிக் சவுன்டு ஒலிகளை (Ultrasonic sound) எழுப்பி, சிறு மீன் போன்ற இரைகளின் பிம்பத்தை மனக்கண்ணால் உணர்ந்து, இரைகளைக் கட்டம் கட்டும். பின்னர், அவற்றைக் கவ்விப்பிடித்து உண்ணும்.ஓங்கில்களுக்குத் தற்போது வேறு சில ஒலிகளால் ஆபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கங்கை நதியில் பயணம் செல்லும் படகுகள், கப்பல்கள் ஆகியவற்றிலுள்ள இஞ்சினின் சத்தம், ஓங்கிலின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கிறது. மற்ற உயிரினங்கள் வெளிப்படுத்தும் சத்தங்களை இவற்றின் காதுகளில் கேட்கவிடாமல் செய்துவிடுகிறது. எனவே, இஞ்சின்களின் ஓசையைத் தவறாகப் புரிந்துகொண்டு, இரைதேட முயற்சிக்கின்றன. ஆனால், இம்முயற்சி தோல்வியிலேயே முடியும். உணவு கிடைக்காமல் போவது ஒருபுறம் என்றால், இதுபோன்ற தவறான ஒலி சமிக்ஞைகளால், ஓங்கில்களின் தகவல் தொடர்புத் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது.- சு.கவிதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !