விளையாட்டு வீரர்களுக்கான பத்ம விருதுகள்
இந்தியாவில் கலை, இலக்கியம், விளையாட்டு என, பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் 'பத்ம' விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷணுக்குப் பரிந்துரைக்கப்படும் முதல் விளையாட்டு வீராங்கனையாக, மேரி கோம் விளங்குகிறார். இதற்கு முன் விஸ்வநாதன் ஆனந்த், சச்சின், சர் எட்மண்ட் ஹில்லாரி ஆகிய மூன்று விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமிற்கு, 2006இல் பத்மஸ்ரீ விருதும், 2013இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.சமீபத்தில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பி.வி.சிந்து, நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷணுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.பத்மஸ்ரீ விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளோர்:* வினேஷ் போகத் (மல்யுத்தம்)* மனிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்)* ஹர்மன்பிரீத் கௌர் (கிரிக்கெட்)* ராணி ராம்பால் (ஹாக்கி)* சுமா ஷிரூர் (துப்பாக்கி சுடுதல்)* டஷி மாலிக் மற்றும் நுங்ஷி மாலிக் (மலையேறுதல்)இதற்கான இறுதிப்பட்டியல், 2020 ஜனவரி 25இல் வெளியிடப்படும்.