உள்ளூர் செய்திகள்

மகன் தந்தைக்காற்றும் உதவி

வணிகவியல் மேலாண்மைத்துறையில் இளங்கலை படிக்கும் 19 வயது ரோஹித், தனது அப்பாவின் கஷ்டத்திற்குத் தீர்வு கண்டு பிடித்திருக்கிறார். ரோஹித்தின் அப்பா, வெங்காயம் பயிர் செய்யும் விவசாயி. ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் வெங்காயத்தை நீண்ட நாட்கள் காப்பாற்றி வைக்க முடியாமல், கிடைக்கின்ற விலைக்கு உடனடியாக விற்கவேண்டிய நிலை. எனவே ஒரு கிலோ வெங்காயத்தை 50 பைசாவுக்கு விற்ற நாட்களும் உண்டு. நீண்ட நாட்கள் யோசனைக்கும், பல முயற்சிகளுக்கும் பின் வெங்காயத்தை நீண்டநாட்கள் காப்பாற்றி வைக்கும் நுட்பத்தை கண்டுபிடித்துவிட்டார் ரோஹித்.600 சதுர அடி பரப்புள்ள ஒரு சிறிய கிட்டங்கியை வடிவமைத்துள்ளார் ரோஹித். தரையிலிருந்து 6 அங்குல உயரத்தில் கம்பி வலை அமைக்கப்பட்டு அதன் மேல் வெங்காயத்தை பரப்ப வேண்டும். ஆறு இடங்களில் காற்றை வெளியேற்றும் மின்விசிறிகள் (exhaust fans) பொருத்தப்பட்டுள்ளன. இவை, வெங்காயத்தின் அடிப்பரப்பில் வெப்பம் தாக்காமல் தடுத்து நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !