பாரதி பொருத்தம்
பாரதியார் பாடல்களில் இருந்து சில சொற்கள் தரப்பட்டுள்ளன. முதல் வரிசையில் இருக்கும் பாடலின் வேறொரு சொல் அடுத்த வரிசையில் தரப்பட்டுள்ளது. இரண்டையும் பொருத்த வேண்டும். பிறகு அந்தப் பாடலின் முதல் வரியைக் கண்டுபிடிக்க வேண்டும். 1. கல்வி சிறந்த - அ. விழலுக்கு நீர்பாய்ச்சி2. பிறநாட்டு நல்லறிஞர் - ஆ. இறவாத புகழுடைய3. பஞ்சமும் நோயும்நின் - இ. மானொத்த பெண்ணடி4. உழவுக்கும் தொழிலுக்கும் - ஈ. பல்விதமாயின5. தேனொத்த பண்டங்கள் - உ. தஞ்சம டைந்தபின்விடைகள்1. ஈ: செந்தமிழ்நாடென்னும் போதினிலே இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே2. ஆ: யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்இனிதாவதெங்கும் காணோம் 3. உ: என்று தணியுமிந்த சுதந்திர தாகம்என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்4. அ: ஆடுவோமே பள்ளு பாடுவோமேஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று5. இ: தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை