நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.01. இந்தியாவில் இருந்து எந்த நாட்டிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணியருக்கு, யு.பி.ஐ. எனப்படும், பணப்பரிமாற்றம் வாயிலாகப் பணம் செலுத்தும் வசதி, சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது?அ. மாலி,ஆ. ஆஸ்திரியாஇ. கத்தார்,ஈ. பெலாரஸ்02. பாரம்பரியக் கலைகளைப் பயிற்றுவிக்கும் நிகர்நிலைப் பல்கலையான கலா மண்டபத்தில், வரலாற்றிலேயே முதன்முறையாக, மாணவர்களுக்குச் சமீபத்தில், அசைவ உணவு பரிமாறப்பட்டது. இந்தப் பல்கலை எந்த மாநிலத்தில் உள்ளது?அ. கேரளம்,ஆ. தமிழகம்இ. தெலங்கானாஈ. ஆந்திரப் பிரதேசம்03. தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக பஸ், ரயில், கப்பல், விமானம் என, நான்கு வகை போக்குவரத்து வசதியும் உடைய நகரமாக அறியப்படுவது எது?அ. திருப்பூர்,ஆ. காஞ்சிபுரம்இ. காரைக்குடி,ஈ. தூத்துக்குடி04. தமிழகத்தில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம், எவ்வளவு சதவீதமாகக் குறைந்துள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்?அ. 5.5,ஆ. 7.7,இ. 6.6,ஈ. 4.405. இந்தியாவில், சமீபத்தில் நடந்த ஏழு மாநிலச் சட்டசபை இடைத்தேர்தல்களில் 'இண்டியா' கூட்டணி, 13 தொகுதிகளில் எத்தனையைக் கைப்பற்றியது?அ. ஒன்பது,ஆ. பதின்மூன்றுஇ. பத்து,ஈ. ஐந்து06. ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் புதிதாக எத்தனை கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது?அ. 8 கோடி,ஆ. 5 கோடி,இ. 3 கோடிஈ. 10 கோடி07. தொழில்நுட்பத் துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் எத்தனை லட்சத்திற்கும் மேற்பட்ட உயர்த் தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கான தேவை உள்ளதாக, 'நாஸ்காம்' வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது?அ. 15 லட்சம்,ஆ. 5 லட்சம்,இ. 10 லட்சம்,ஈ. 8 லட்சம்08. தேசிய அளவில் திருச்சியில் நடந்த தேசிய மாணவர் படைகளுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தமிழகம் எத்தனையாவது இடத்தைப் பிடித்தது?அ. முதலிடம்,ஆ. இரண்டாமிடம்இ. மூன்றாமிடம்,ஈ. நான்காமிடம்விடைகள்: 1. இ, 2. அ, 3. ஈ, 4. ஆ, 5. இ, 6. அ, 7. இ, 8. ஆ.