உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு முன்னுரிமை தரும் பிங்க் கேப் சேவை

பெண்களுக்கான 'பிங்க் கேப்' எனும் சேவையை கோல்கட்டாவில் தொடங்கி வைத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. நாடு முழுவதிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிங் கேப் (PINK CAB) வாகனங்களை பெண் ஓட்டுநர்களே இயக்குவார்கள். இதில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களில் பெண்களுக்கே முன்னுரிமை. மொபைல் ஆப்ஸ் செயலி மூலம் இச்சேவையைப் பெண்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்குவங்க மாநிலத்தில், புதிய வாகனங்கள் வாங்கும் பெண் வாகன ஓட்டிகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 'பிங் கேப் மூலம், சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வாழ்த்துகள்' என்று தனது ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !