பிளஸ் 2 ரிசல்ட்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் இரண்டு பேரும், 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தார்கள். திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவி ஜி.பவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம் பிடித்தார். நாமக்கல் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி வேணுபிரீதா 1193 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். தேர்ச்சி விகிதம்: அரசுப் பள்ளிகள் 85.71%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.85%, மெட்ரிக் பள்ளிகள் 97.61% தேர்ச்சி பெற்றுள்ளன.