உளுந்துடன் செய்த பொங்கல் பண்டைய திருமணத்தில் விருந்து
அக்காலத்தில், திருமணத்தை வதுவை, மன்றல், மணம் என்ற பெயர்களில் அழைத்தனர். ஆனால், ஆரம்பத்தில், திருமணம் என்ற பெயரில் சடங்கு இன்றி ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் முறை இருந்திருக்கிறது. ஏமாற்றுதல், நம்பிக்கையின்மை வந்த பிறகுதான், திருமண நடைமுறை உருவாகியுள்ளது.இதனை,'பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்ஐயர் யாத்தனர் கரணம் என்ப'என்னும் தொல்காப்பிய நூற்பா, திருமண விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததை காட்டுகிறது. கரணம் என்பது, ஒரு சடங்கு முறை. மன்றல்இன்று பயன்பாட்டில் உள்ள, கல்யாணம் என்ற சொல், பழந்தமிழரிடம் இல்லை. பதினென் கீழ்க்கணக்கு நூல்களான, நாலடியார், ஆசாரக் கோவை ஆகியவற்றில்தான், கல்யாணம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.'கல்யாணம் செய்து கடிப்புக்க' என்று நாலடியாரும், 'அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை' என்று ஆசாரக்கோவையும் கூறுகின்றன.அதற்கு முன்பாக,'நல்லோர் நல்லோர் நாடிவதுவை யயர விரும்புதி நீயே'என்ற ஐங்குறுநூறு வரிகள், நல்லோர் பலர் கூடி, வதுவை என்னும் திருமணத்தை நடத்தி வைத்தனர் என்பதை தெரிவிக்கிறது. 'தொன்றியல் மரபின் மன்ற லயர' என்ற அகநானூற்று வரிகளில், மன்றல் என்ற சொல் திருமணம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.சகுனம் பார்த்தல்இப்பொழுது நல்ல நாள், நட்சத்திரம், கிழமை, வளர்பிறை பார்த்து திருமணம் செய்வது போல், அக்காலத்திலும், இப்பழக்கம் மூதாதையரிடம் இருந்திருக்கிறது. சங்கக் காலத்தில், புள் எனப்படும், சகுனம் பார்த்து திருமணம் செய்யும் முறை இருந்தது.பெண் வீட்டில் திருமணம் ரோகிணி நட்சத்திரத்தில், காலை வேளையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்தனர். திருமணம் பெண் வீட்டில் நடைபெற்றது. வீட்டிற்கு முன் பந்தல் அமைத்து. புது மணல் பரப்பினர். கடவுளை வணங்கி விளக்கு ஏற்றும் பழக்கம் இருந்திருக்கிறது. முரசு ஒலிக்கச் செய்து, மங்கல நீராட்டி, முளைப்பாரி வைத்து, விருந்தினருக்கு உணவு பரிமாறி திருமணம் நடத்தியுள்ளனர். 'மழைபட்டன்ன மணல் மலி பந்தஇழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பாற்றித்தமர் நமக்கீத்த தலைநாளிரவு (அகம்)மழை பெய்வது போல் ஓசையை உடைய மணப்பந்தலில், புது மணல் கொட்டி, பூக்களால் அலங்கரித்து, தந்தை, மணமகன் கையில் கொடுத்த, தலை நாள் இதுவாகும் என்று பெண், பெருமிதம் கொள்வதில் இருந்தும், பண்டை திருமணத்தில் மணல் பரப்பியதை அறிந்து கொள்ளலாம். பெண்ணின் தந்தை, தன் மகளின் கையைப் பிடித்து, மணமகன் கையில் ஒப்படைக்கும் முறையும் பின்பற்றப்பட்டுள்ளது.சீர் வரிசைமணமகள் வீட்டிற்குச் சென்று, மணமகன் வீட்டார் பெண் கேட்பது, இப்போதும் மரபாக இருக்கிறது. இந்தப் பழக்கம் சங்க காலம் முதலே இருந்திருக்கிறது. பெண் வீட்டிற்குச் செல்லும் ஆண்கள், வளையல், பூ, சிலம்பு இவைகளை சீர்வரிசையாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த மூன்றையும், மணப்பெண்கள் அணிய வேண்டும்.இளவேனிற் காலம்வேங்கை பூக்கும் இளவேனிற் காலத்தில், திருமணம் நடத்தியிருக்கிறார்கள்.('வேங்கை தந்த வெற்பணி நன்னாள்' - நற்றிணை) வீரத்தினை அடிப்படையாகக் கொண்டும், திருமணங்கள் நடந்துள்ளன. ஏறு தழுவுதலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். 'கொல்லேறு சாட இருந்தார்க்கெம் பல்லிருங்கூந்தலணை கொடுப்பேம்யாம்'என்னும் கலித்தொகை பாடல், வீரத்திற்காக பெண்ணை மணம் முடித்துக்கொடுக்கும் முறை இருந்துள்ளதை அறியலாம்.தாலி கட்டும் முறை பற்றி, சங்க இலக்கியத்தில் சான்றுகள் இல்லை. ஆனால், 'ஈகையரிய இழையணி' என்பது தாலியைக் குறிக்கும் என்கின்றனர் தமிழறிஞர்கள். அது தொடி என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகின்றனர்.'கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி' என்ற சங்கப் பாடலில் வரும் தொடி, தாலியை குறிப்பிடுவதாகக் கருதுகின்றனர். வரதட்சணை, பற்றியெல்லாம் சங்கப் பாடல்களில் இல்லை. அவை இடையில் வந்தவை. முதலில், ஆண், பெண்ணுக்கு சீர் கொடுத்து மணந்து கொள்ளும் முறை நடைமுறைக்கு வந்தது. பின்னர், பெண், சீர்கொடுத்து மணந்து கொள்ளும் முறை தற்போது இருக்கிறது. ஒரு பெண்ணை மணம் முடிக்க, அவள் வீட்டில் பல காலம் தங்கி, ஆண் பணி புரிந்திருக்கிறான்.வீட்டிலேயே திருமணம் நடைபெற்றது. அதுதான் கவுரமாக கருதப்பட்டது. நெல்லும் பூவும்பந்தலில் பூக்களை தொங்கவிடும் பழக்கமும் இருந்துள்ளது. அத்துடன், நெல்லும் பூவும் மணமக்கள் மீது போட்டு வாழ்த்தி உள்ளனர். இதன் எச்சமாக மணப்பந்தலைச் சுற்றி, பூக்களை தொங்க விடுவதும், அட்சதையாக அரிசியும், பூவும் தூவுவது மரபாக உள்ளது.'நெல்நீரெறிந்து விரிச்சி ஓர்க்குஞ்செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா'என்ற புறநானூற்றுப் பாடல், நெல்லும் நீரும் கலந்து வாழ்த்தியதை விளக்குகிறது. இப்படி நீரும் நெல்லும், பூவும் கொண்டு வாழ்த்தினால், மணமக்களை தீய சக்திகள் நெருங்காது என்ற நம்பிக்கை இருந்துள்ளது. அத்துடன் மணமக்கள் வளமாக வாழ வேண்டும் என்ற அடிப்படையிலேயே, நெல்லும், மலரும் தூவப்பட்டிருக்கிறது.காலையில் திருமணம் நடந்துள்ளது (கனையிருள் அகன்ற கவின் பெறு காலை' அகம்) திருமணம் நடைபெறுவதற்கு முன், கடவுளை வணங்கும் முறை இருந்துள்ளது. திருமணத்தில் முழவு எனப்படும் முரசு இசைத்தனர்.திருமணத்தின்போது, பெண்ணுக்கு கணவன் தலையில் பூ வைத்து விடும் பழக்கம் இருந்திருக்கிறது. உளுந்து பொங்கல்'உளுந்து தலைப் பெய்த கொழுங்களி மிதவைபெருஞ்சோற்றமலை நிற்ப நிரைகால்மனைவிளக்குறுத்து, மாலைத் தொடரிக்'என்ற அகநானூற்றுப் பாடலில், உளுந்து சேர்த்து செய்த பொங்கலை, விருந்தினர் சாப்பிடுவதும், மணமாலைகள் தொங்கியபடி இருந்ததும் குறிப்பிடப்பட்டு உள்ளன.