உள்ளூர் செய்திகள்

தமிழிலும் பிரதமர் அலுவலக இணையதளம்

பிரதமர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, வெளிநாட்டு சுற்றுப் பயணம், அவர் நிகழ்த்தும் உரை போன்ற தகவல்கள் எல்லாம் www.pmindia.gov.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் இடம் பெறுகின்றன. இதுவரை, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இந்தத் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இதனால், மற்ற இந்திய மொழிகள் தெரிந்தவர்களுக்கு பயன்படுத்துவதில் கஷ்டம் இருந்தது. இதையடுத்து, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய, ஆறு மொழிகளிலும் இந்த இணையதளம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !