ராஸ்பர்க் 4
'பார்முலா 1' கார் பந்தயத்தின் 4ஆவது சுற்று ரஷ்யாவின் சோச்சியில் நடந்தது. இதன் இறுதிச்சுற்றில் சீறிப்பாய்ந்த 'மெர்சிடஸ்' அணியின் ஜெர்மனி வீரர் ராஸ்பர்க் பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 39.94 நிமிடத்தில் அடைந்து முதலிடம் பெற்று கோப்பை வென்றார். இதற்கு முன், ஆஸ்திரேலியா, பக்ரைன், சீன சாம்பியன்ஷிப்பில் அசத்திய இவர், இந்த 'சீசனில்' தொடர்ச்சியாக வென்ற 4வது பட்டம் இது. அடுத்த இரு இடங்களை 'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் ஹாமில்டன், 'பெராரி' அணியின் பின்லாந்து வீரர் ராய்க்கோன் பிடித்தனர்.