உள்ளூர் செய்திகள்

நிஜ ஹீரோக்கள்!

தீயணப்புப் படையினர் நாள் மே 4ஆபத்துக் காலங்களில் உதவும் தீயணைக்கும் படையினரின் பணி நாட்டிற்கு மிகவும் அவசியமானது. ஆனால், அடிக்கடி தேவைப்படாததால் இவர்களின் உதவியைப் பலரும் பெரிதாக நினைப்பதில்லை. விபத்தாகவோ கலவரங்களாலோ தீ பற்றும்போது ஓடி வருபவர்கள் தீயணைப்பு வீரர்கள். தீயை அணைக்கப் போராடுவார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிறரைக் காப்பாற்றுவார்கள். இவர்கள்தான் நிஜ ஹீரோக்கள்! இந்தத் துறையில் பெண்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் ஏற்படும் காட்டுத் தீ போன்ற இயற்கை சீரழிவுகளின்போது இவர்களின் உதவிதான் அதிகம் தேவையிருக்கும்.எப்படி வந்தது? ஆஸ்திரேலியாவில் 1999, ஜனவரி 4ல் பெரும் காட்டுத்தீ பரவியது. அதைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நினைவுகூரும் விதமாகவும் உலகம் முழுவதிலும் இருந்து பல மின்னஞ்சல்கள் வந்தன. அதன்பிறகே, மே 4ஆம் தேதியை 'அனைத்துலக தீயணைக்கும் படையினர்' நாளாக சர்வதேச அளவில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.* இந்த நாளின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்று சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இருக்கும் ரிப்பன்.* இது துல்லியமாக, 5 செ.மீ. நீளமும் 1 செ.மீ. அகலமும் கொண்டிருக்கும்.* இதில், சிவப்பு என்பது நெருப்பையும் நீலம் என்பது தண்ணீரையும் குறிக்கும்.* ப்ரியா ரவிச்சந்திரன் என்பவர் 2003ல் தமிழ்நாட்டின் தீயணைப்புத் துறையில் சேர்ந்த முதல் பெண்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !