உள்ளூர் செய்திகள்

1000 ஆண்டுகள் பழமையான இந்தியச் சிலைகள் மீட்பு

இந்தக் கற்சிலைகள் 8 முதல் 10ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம் சுமார், 3 கோடி ரூபாய்க்கு ஏலம் விட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவின் ராஜஸ்தான் அல்லது மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டன. இந்தச் சிலைகளை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாக இன்டர்போல் அமைப்பும், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பும் இணைந்து மீட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !