இரயில்வே காவல்படையில் மகளிருக்கு இடஒதுக்கீடு!
இரயில்வே காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்குரிய அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. இந்திய இரயில்வேயில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி விரைவில் அறிவிக்கப்பட உள்ள 10 ஆயிரம் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று இரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.தற்போது இரயில்வேக்கு 13 ஆயிரம் பேரைத் தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 13.08 லட்சம் ஊழியர்களைக் கொண்டு, உலகிலேயே மிக அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாக இந்திய இரயில்வே உள்ளது குறிப்பிடத்தக்கது.