மாணவிக்கு மரியாதை
பருவநிலை ஆர்வலரும், காலநிலை மாற்றங்களுக்கு எதிரான போராட்டங்களின் முன்னோடியுமான, ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவி கிரெட்டா துன்பெர்க், 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக 'டைம்' பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'இந்தப் பிரபஞ்சம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையான பருவநிலை மாற்றத்திற்கெதிரான வலிமையான குரலாக கிரேட்டா மாறி உள்ளார்'' என்று டைம் பத்திரிகை கூறியுள்ளது.