உள்ளூர் செய்திகள்

ரீலா? ரியலா?

பாலூட்டிகளுக்கு இரண்டு வகையான பற்கள் காணப்படுகின்றன.உண்மை. பாலூட்டிகளின் உணவுமுறைக்கு ஏற்ப, இரு வகையான பற்கள் காணப்படுகின்றன. அவை, பால் பற்கள், நிலையான பற்கள் ஆகும். பாலூட்டிகளின் சிறப்பே இரண்டு வகையான பற்களைக் கொண்டிருப்பதுதான். இவை, பிறந்தவுடன் தம் தாயிடமிருந்து பாலை உண்ணுகின்றன. இதற்குப் பற்கள் தேவையில்லை. எனவே தான், பெரும்பாலான பாலூட்டிகள் பற்கள் இல்லாமல் பிறக்கின்றன. அவை வளரும்போது, அவற்றின் உணவுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டு, நிலையான பற்கள் வளர்வதை ஊக்குவிக்கின்றன. இதனால் நிலையான பற்கள், பால் பற்களுக்கு அழுத்தத்தைத் தந்து அவற்றை விழச் செய்துவிடும். ஆக்டோபஸின் ரத்தம் சிவப்பாக இருக்கும்.தவறு. ஆக்டோபஸுக்கு மூன்று இதயங்கள் உள்ளன. ஓர் இதயம், அதனுடைய உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தைச் செலுத்த உதவுகிறது. மற்ற இரண்டு இதயங்களும் சுவாசிக்கும் பகுதியான அவற்றின் செதில்களுக்கு ரத்தத்தைச் செலுத்துகின்றன. ஆக்டோபஸின் ரத்தம், சுவாசித்தலின்போது ஆக்சிஜனை ஏற்று, நீலநிறத்தில் காணப்படுகிறது. ஆக்சிஜனை ஏற்காத நிலையில், அதனுடைய ரத்தம் நிறமற்று உள்ளது. ரத்தம் நீல நிறமாவதற்கு அதனுடைய ரத்தத்தில் உள்ள ஈமோசயனின் என்னும் செம்புச்சத்து காரணமாகும். குளிரான கடல் பகுதியில் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல, ஹீமோகுளோபின் என்னும் இரும்புச்சத்தைவிட ஈமோசயனின் சிறந்ததாகச் செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !