உள்ளூர் செய்திகள்

ரீலா? ரியலா?

லயர் (Lyre bird) என்ற பறவை, மனிதக் குழந்தை போல சத்தமிடும்.உண்மை. இவை ஆஸ்திரேலியாவைப் பூர்விகமாகக் கொண்டவை. இவை தாங்கள் கேட்கும் எந்த ஒலியையும் அப்படியே மீண்டும் எழுப்பக் கூடியவை. இவற்றின் மயில் போன்ற தோகை 55 சென்டிமீட்டர் வரை வளரும். இவை பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆண் பறவையை விட, பெண் பறவை சிறிதாக இருக்கும். இவற்றால் மிகவும் உயரமாகப் பறக்க முடியாது. பெரும்பாலான நேரம் நிலத்திலேயே நடமாடும். இவற்றில் ஆல்பர்ட் லயர், சூப்பர்ப் லயர் என்று இரு வகைகள் உள்ளன. இவை வித்தியாசமான ஒலியை எழுப்புவதால், இப்பெயர் பெற்றன. லயர் என்பது இசைக்கருவியான யாழைக் குறிக்கும்.நம்முடைய உடலால் டி3 வைட்டமினை (D3) உற்பத்தி செய்ய முடியாது.தவறு. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் டி3, வெகு சில உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது. நம்முடைய உடலில் சூரிய வெளிச்சம் படும்போது, இது இயற்கையாக உற்பத்தி ஆகும். இந்த வைட்டமின் எலும்புகள், நரம்புகள், மூளை ஆகியவற்றுக்கு அத்தியாவசியமானது. முடி வளர்ச்சிக்கும் கூட தேவையானது. சில வகையான புற்றுநோய்கள் வராமல் காக்கிறது. இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும், ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !