நம் தொழிலை ரோபோ பறிக்கும்!
'வேர்ல்டு 2050' என்ற நூல் வெளியீட்டு விழாவில், பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் 'நம் வேலைகளைப் பறிக்கப் போகிறது ரோபோ! இதற்கு, தொழில்நுட்பம் அல்லது உலகமயமாக்கல் என்ற இரண்டு அம்சங்கள்தான் காரணம். இதன் விளைவாகவே, சேவை சார்ந்துள்ள நாடுகளில் தொழில்நுட்பம் ஒதுக்கப்படுகிறது. இந்தியா, வியட்னாம் போன்ற ஏற்றுமதியைச் சார்ந்துள்ள நாடுகளுக்கும், தொழில்நுட்ப மாற்றங்கள் கவலை அளிக்கின்றன' என்று அவர் கூறினார்.