குங்குமப் பூ
இது தென்மேற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது என்றாலும், முறையாக கிரீஸ் (Greece) நாட்டில்தான் முதலில் பயிரிடப்பட்டது. இத்தாவரத்தின் உலர்ந்த பூதான் மருந்து, உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. மணம் மிக்கது. லத்தீன் வார்த்தையான சப்ரனம் (safranum) என்னும் வார்த்தையில் இருந்து சப்ரான் (saffron) வந்தது. ஒரு சிலர் அரபி வார்த்தை (zafaran - சபாரேன்)யில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். சபாரேனுக்கு அரபி மொழியில் மஞ்சள் என்று பொருள்.ஈரானில் வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்ட ஓவியங்களில் குங்குமப்பூவை பயன்படுத்தி இருக்கிறார்கள். சுமேரியர்கள் மருந்துப் பொருளாக பயன்படுத்தி உள்ளனர். பழைய பாரசீகத்தில் நெசவுத் தொழிலில் குங்குமப் பூ நாரிலிருந்து ஆடைகள் தயாரித்திருக்கிறார்கள். இதிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்கள் மருந்துப் பொருளாகவும், குளியலுக்கும் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்திலும் துணிகளுக்கு சாயமேற்றவும், வாசனைப் பொருளாகவும் இந்தியா, சீன நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.இது ஒரு பூச்சி கொல்லியாகவும் பயன்படுகிறது. 90 சதவீதம் குங்குமப்பூவை ஈரான்தான் உற்பத்தி செய்கிறது. ஊதாவும், நீலமும் சேர்ந்த கலரில் உள்ள பூக்களில் பூ மலர்ந்த பிறகு 3 சூலகமுடிகளே இருக்கும். இதையெல்லாம் ஒவ்வொரு பூவிலிருந்தும் சேகரிப்பார்கள். இதனால் சுமார் 450 கிராம் கிடைக்க 80,000 மலர்கள் தேவைப்படுகின்றன. எனவே இதனுடைய விலையும் கூடுதல். நிறைய கனிமச்சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளது. அதாவது கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, தாமிரம், செலினியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் அடங்கியுள்ளது. முக்கிய வைட்டமின்களான, ஏ, சி, போலிக் அமிலம் குங்குமப்பூவில் அடங்கி உள்ளன.இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தப் பூ விளைகிறது.