உள்ளூர் செய்திகள்

சாகித்ய அகாதெமி விருது: முதல்வர் வாழ்த்து

ஆண்டுதோறும் மத்திய அரசு அமைப்பான சாகித்ய அகாதெமி வழங்கும் விருது, இவ்வாண்டு தமிழில் எஸ்.ராமகிருஷ்ணனின் 'சஞ்சாரம்' நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதுபெரும் எழுத்தாளர்களை கெளரவிக்கும் விதமாக, ஜனவரி மாதம் அவர்கள் அரசு செலவில் டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விருது வழங்கப்படும். 2014ஆம் ஆண்டு வெளியான இந்நாவல் நாகஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசுவதாக அமைந்துள்ளது. தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் எஸ்.ரா.விற்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது முதல், பலரும் வாழ்த்துகளை பகிர்ந்துவருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !