சுலபமாகத் தண்ணீர் சேமிக்கலாம்!
நாம் தினசரி எத்தனை லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம், எவ்வளவு மிச்சப்படுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான், எதிர்காலத்தில் கூடுதல் கவனத்தோடு தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த முடியும். தினசரி நாம் செலவழிக்கும் நீரின் அளவையும், அதில் எத்தனை லிட்டர் சேமிக்கலாம் என்பதையும் பார்க்கலாம். பல் துலக்குதல்குழாய் நீர் - 5 லி.குவளை - 0.75 லி.சேமிப்பு - 4.25 லி.குளிப்பதற்குஷவர் - 100 லி.வாளி - 18 லி.சேமிப்பு - 82 லி.கழிப்பறை கழிப்பறை - 20 லி.வாளி - 6 லி.சேமிப்பு - 14 லி.முகச்சவரம்குழாய் நீர் - 5 லி.குவளை - -0.75 லி.சேமிப்பு - 4.25 லி.துணி துவைத்தல்குழாய் நீர் - 116 லி.வாளி - 36 லி.சேமிப்பு - 80 லி.தொட்டிச் செடிகள்குழாய் நீர் - 50 லி.வாளி - 10 லி.சேமிப்பு - 40 லி.வாகனங்கள் கழுவுதல்குழாய் நீர் - 100 லி.வாளி - 18 லி.சேமிப்பு - 82 லி.தோட்டச் செடிகள் குழாய் நீர் - 100 லி.பூவாளி - 25/30 லி.சேமிப்பு - 70/75 லி.தகவல் உதவி: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்.